Latest News
Saturday, May 28, 2016

இது நம்ம ஆளு’ விமர்சனம்|idhu namma aalu review|tamil movie review in tamil|tamil latest news




நயன்தாரா நடிச்ச எந்த படமும் ஹிட்டாகும் என்று எழுதிவைத்துக்கொள்ளலாம் போல. அவர் நடித்துள்ள இது நம்ம ஆளு படமும் அப்படித்தான். மிகசிறப்பாக இருப்பதாகவே பெரும்பலான விமர்சனங்கள் கூறுகின்றன. நாமும் விமர்சனத்தை பார்ப்போம். சிம்பு சார் உங்களுக்கு நிச்சயம் இது சூப்பர் ஹிட் தான். எத்தனை முறை தடை பட்டு வந்தாலும், படம் பட்டய கௌப்பிதான் உள்ளது.

சிம்புவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல். ஆனால், கல்யாணம் கைகூடாமல் போக, தாடி வளர்த்துத் தவிக்கிறார் சிம்பு. பின்பு நயன்தாராவைப் பெண் பார்க்கப் போன இடத்தில், அவரைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆனால், சிம்பு – ஆண்ட்ரியா காதல் நயனுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. சிம்பு – நயன் கல்யாணம் நடந்ததா? இல்லை, ஆண்ட்ரியாவுடன் சிம்பு இணைந்தாரா? என்பதுதான் ‘இது நம்ம ஆளு’.


‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்வது போல் சிம்புவுக்கு அருமையான படம் இது. அவருடைய பந்தா எதுவும் இல்லாமல், கதையின் போக்கில் செல்கிறார். சிம்புவின் நல்ல படங்கள் வரிசையில் ‘இது நம்ம ஆளு’க்கு நிச்சயம் இடம் உண்டு. என்ன ஒன்று, சிம்புவின் வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுத்தது போல் இருக்கிறது.

அழகுச்சிலையாக நயன்தாரா. அவர் கொஞ்சிக் கொஞ்சி பேசுவதைப் பார்க்கும்போது, கல்லுக்கும் காதல் வரும். அப்படிப்பட்ட எக்ஸ்பிரஷன்ஸ். நயன்தாராவுக்காகவே நாலு தடவை இந்தப் படத்தைப் பார்க்கலாம். தங்கள் வாழ்க்கையும் இதில் இருக்கிறது என்றும் தெரிந்தும், முன்னாள் காதலரான சிம்புவுடன் சேர்ந்து நடித்த நயனின் தில்லுக்கு ஹேட்ஸ் ஆப்!

ஆண்ட்ரியாவும் அழகு தேவதையாகத்தான் தெரிகிறார். படத்தைத் தொய்வடையாமல் கொண்டுபோவது சூரியின் அலப்பறைகள்தான். ஒவ்வொரு கவுண்டருக்கும் கைதட்டிச் சிரிக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் வசனங்கள்தான். சில இடங்களில் ‘ஆஹா… ஓஹோ…’வெனப் பாராட்ட வைக்கும் வசனங்கள், சில இடங்களில் ‘என்னடா பேசிக்கிட்டே இருக்காங்க…’ எனக் கடுப்பேத்துகிறது. பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு. இன்றைய இளைஞர்களின் காதலை, சிம்புவின் வாழ்க்கையை முன்வைத்து யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார் பாண்டிராஜ்.

இந்த விமர்சனம் ஒரு புறம் இருக்கட்டும் பிரசாந்த் அவர்கள் யூடியூபில் இது நம்ம ஆளு படம் குறித்து செய்துள்ள விமர்சனத்தை பார்க்கலாம்

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இது நம்ம ஆளு’ விமர்சனம்|idhu namma aalu review|tamil movie review in tamil|tamil latest news Rating: 5 Reviewed By: news7