Latest News
Saturday, May 28, 2016

தமிழக அரசுதான் விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது: ஜெ அன்பழகன் குற்றச்சாட்டு|tamil latest cinema news|tamil latest news



விஜய்யின் தலைவா படம் வெளியேவராமல் தடுத்ததே தமிழக அரசுதான் என்று படதயாரிப்பாளரும், திமுக எம்எல்ஏவுமான ஜெ,அன்பழகன் குற்றம்சாட்டியுள்ளார்

நேற்று கமலா திரையரங்கில் நடந்த கககபோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜெ அன்பழகன் பேசுகையில், "இப்போது படங்களை வெளியிடுவதில் பிரச்சனை வருகிறது. சிறுபடங்கள் பெரிய படங்கள் என்ற பாராபட்சமே இதில் இல்லை.

 முன்பு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தை வெளியிடக் கூடாது என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் மனமுடைந்த தயாரிப்பாளர் உடல்நிலை சரியில்லாமல் போகவே, அதை கண்டு வருத்தமுற்ற நான் அதை வாங்கி வெளியிடுகிறேன் என்று அறிவித்தேன். இரவோடு இரவாக அய்யப்பன் 400 திரையங்குகளை புக் செய்தார். அதன் பின்னரே படம் வெளியானது. இதுபோல நிறைய சின்ன படங்களை வாழ வைத்த ஸ்ரீதேவர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது அவரது மகன் பாரதி அய்யப்பன் சார்பாக மீண்டும் துவங்கபட்டு சிறிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. அவரது தந்தைக்கு என் பூரண ஆசிகள் இருந்தது போன்று இவருக்கும் என் ஆசியும் எப்போதும் உண்டு," என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தமிழக அரசுதான் விஜய் படத்தை வெளியிடாமல் தடுத்தது: ஜெ அன்பழகன் குற்றச்சாட்டு|tamil latest cinema news|tamil latest news Rating: 5 Reviewed By: news7