புதுடெல்லி
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், அவரது விடுதலை விவகாரத்தில், தொழில்நுட்ப தவறுகளை குறிப்பிட்டு, வக்கீல் பண்டிட் பரமானந்த் கட்டாரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘7 ஆண்டுக்கு மேல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளுக்குத்தான், குற்றவியல் நடைமுறை சட்டப்படி, மேல்முறையீடு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையே விதிக்கப்பட்டதால், திருத்தம் கோரும் மனுவைத்தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். எனவே, அவரை விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இதுதொடர்பான சட்ட குழப்பங்களுக்கு விடை காண எனது மனுவை அரசியல் சட்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு எடுத்துக்கொள்ளப்பட்டது. நடிகர் சல்மான்கான் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதி கேஹர் அமர்வுக்கு மனுவை நீதிபதிகள் மாற்றினர். அங்கு அம்மனு, 5–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment