சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதியை கொலை செய்தவனை ‘கேன்டீன்’ ஊழியர் போலீசுக்கு அடையாளம் காட்டியுள்ளார். கொலை எப்படி நடந்தது என்பது குறித்து போலீசுக்கு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:–
கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள்? என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள். திடீரென்று ‘அய்யோ... அம்மா...’ என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.
சிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார். இவ்வாறு கேண்டீன் ஊழியர் கூறினார்.
இதனிடையே நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ள இந்த படுகொலை வழக்கை சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாக இந்த வழக்கை தினமும் ஆய்வு செய்துவருகிறார்.
கூடுதல் கமிஷனர் சங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கண்காணிப்பு கேமரா புகைப்படத்தில் உள்ள வாலிபர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். தற்போது அவர்தான் கொலையாளி என்று உறுதிபட தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு, ஏற்கனவே மிரட்டல் இருந்துள்ளது. ஆனால் அவர் அதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
ஆனால் அவர் தனது பெற்றோர், நெருங்கிய தோழி மற்றும் தனது அக்காவிடம் இந்த மிரட்டல் குறித்து கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். துக்கத்தில் இருந்த சுவாதியின் பெற்றோரிடமும், தோழியிடமும், அக்காவிடமும் முதலில் இதுதொடர்பாக விசாரிக்க முடியவில்லை.
தற்போது தான் மெதுவாக விசாரணையை தொடங்கி உள்ளோம். தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.
கொலைகாரன் பற்றி ஏராளமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. கொலைகாரன் தப்பமுடியாது. கொலைகாரன் பற்றி தகவல்களை நாங்கள் வெளிப்படையாக சொல்லமுடியாது. இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளதால், விசாரணை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம். கண்டிப்பாக கொலைகாரனை இன்னும் ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம். என்று கூறினார்.
0 comments:
Post a Comment