Latest News
Wednesday, June 29, 2016

சுவாதி கொலை பற்றிய ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்!


சுவாதி கொலையைத் தொடர்ந்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கூறிய கருத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்  விவாதிக்கப்படும் விஷயமாக வலம் வருகிறது. அந்த ஃபேஸ்புக் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு என்று ஒய்.ஜி.மகேந்திரன்  விளக்கம் அளித்துள்ளார் 





கடந்த வெள்ளிகிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. இவ்வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

சுவாதி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்து ஒன்றினை பகிர்ந்திருந்தார். மத மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள். கொலை செய்யப்பட்ட சுவாதி ஒரு பிராமணப் பெண் என்பதால் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை எனவும், இதுவே அவர் ஒரு தலித்தாக இருந்திருந்தால் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருப்பார்கள் என அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டு உள்ளது.
அந்த ஃபேஸ்புக் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியது. நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு" என்று கூறியுள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன். மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவக் கொலை போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் போராடுகிறார். அவர்கள், சுவாதி கொலையில் இன்னும் அழுத்தத்துடன் போராடியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சுவாதி கொலை பற்றிய ஃபேஸ்புக் பதிவால் சர்ச்சை - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்! Rating: 5 Reviewed By: news7