Latest News
Wednesday, June 29, 2016

ஐரோப்பிய யூனியன் புது முடிவு: இனி "A E I O U" கிடையாது... வெறும் "E U" மட்டும்தானாம். ஓரம்கட்டப்படும் ஆங்கிலம்

ஐரோப்பிய யூனியன் எங்களுக்கு தேவையில்லை என்று இங்கிலாந்து மக்கள் முடிவு செய்து விட்டதால் தங்களது அலுவல் மொழிகளின் பட்டியலிலிருந்து ஆங்கிலத்தைத் தூக்கி விட ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளனவாம்.

ஐரோப்பிய யூனியனில் தற்போது 24 அலுவல் மொழிகள் உள்ளன. தினசரி செயல்பாடுகள் இந்த 24 மொழிகளில்தான் நடைபெறுகின்றன. ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம், அமைச்சர்கள் குழு ஆகியவற்றில் பிரதானமாக ஆங்கிலமும், பிரெஞ்சும், ஜெர்மனும் பயன்படுத்தப்படுகின்றன


 இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளில் இங்கிலாந்தைத் தவிர்த்து இனி பிற ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்காது. ஆங்கில்தை இனி ஐரோப்பிய நாடுகள் ஓரம் கட்டும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நிறுவனங்களில் தற்போது முதல் மொழியாக இருக்கும்ஆங்கிலம் இனி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

போலந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர் தனுத்தா ஹப்னர் கூறுகையில், ஒவ்வொரு ஐரோப்பிய யூனியன் நாடும் தனது அதிகாரப்பூர்வ மொழி என்பதை அறிவிக்கும் உரிமை உள்ளது. ஐரோப்பிய யூனியனில் ஆங்கிலம் பிராதன மொழியாக இருக்கலாம். அதேசமயம், இங்கிலாந்தே இல்லை என்று வரும்போது ஆங்கிலம் மட்டும் எப்படி நீடிக்க முடியும் என்ற கேள்வியும் எழுவதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

ஆங்கிலத்தை ஓரம் கட்டும் வகையில் ஐரோப்பிய யூனியன் சட்ட விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்தை ஓரம் கட்ட வேண்டுமானால் (ஆங்கிலம் என்று இல்லை, எந்த மொழியாக இருந்தாலும்) உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாற்றம் ஐரோப்பிய யூனியனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

english summery:English language may be dropped by European Union after Brexit


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஐரோப்பிய யூனியன் புது முடிவு: இனி "A E I O U" கிடையாது... வெறும் "E U" மட்டும்தானாம். ஓரம்கட்டப்படும் ஆங்கிலம் Rating: 5 Reviewed By: news7