சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார், சர்ச்சைக்குரிய அப்பதிவில் அவர் கூறியதாவது :
இறந்தது பிராமணப் பெண் என்பதால், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அமைதி காப்பதாகவும் இதுவே ஒரு தலித் பெண்ணாக இருந்தால் அனைவரும் வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பர் என அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரபினர்களிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்ததையடுத்து அந்த பதிவை தனது பக்கத்தில் இருந்து ஒய்.ஜி மகேந்திரன் நீக்கியுள்ளார்.
இதுகுறித்து மன்னிப்பு கேட்ட அவர் அதற்க்கான விளக்கத்தையும் தற்போது தெரிவித்துள்ளார் :
அந்த முகநூல் பதிவு நான் எழுதியது அல்ல. யாரோ எழுதியதை நான் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு உண்டு.மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், கௌரவக் கொலை போன்ற சம்பவங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துப் போராடுகிறார். அவர்கள், சுவாதி கொலையில் இன்னும் அழுத்தத்துடன் போராடியிருக்க வேண்டும் என அவர் கூறினார்.மேலும் தனது பகிர்வால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment