வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள வெங்காயப்பள்ளி கிராமத்தில் மீண்டும் 66 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.
நேற்று முன் தினம் அந்த கிராமத்தில் நூறுநாள் திட்டத்தில் ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது 57 சவரன் தங்க சங்கிலி பெண்களால் கண்டெடுக்கப்பட்டது. அதை மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற பணியில், அதே இடத்தில் இருந்து தங்க சங்கிலியின் அறுந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் எடை 66 கிராம் என வருவாய்துறையினர் தெரிவித்துள்ளனர். பழமையான தங்க சங்கிலி ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால், அங்கு ஆய்வு நடத்த தொல்லியல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment