Latest News
Thursday, June 30, 2016

2016-ம் ஆண்டில் வெளிநாட்டில் வசூலை அள்ளிய டாப் 10 படங்கள் - முதலிடம் பெற்றது யார் தெரியுமா?

 2016-ம் ஆண்டில் வெளிநாட்டில் வசூலை அள்ளிய டாப் 10 படங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த 2016 தொடங்கி  நாளையுடன் ஆறுமாதம் முடிகிறது இந்நிலையில் இதில் முன்னணி நடிகர்கள் என்று பார்த்தால் விஜய், சூர்யா படங்கள் மட்டுமே வந்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, ஜீவா படங்கள் வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தான் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் பார்த்தோம், தற்போது வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த படம் எது என்பதை பார்ப்போம்.எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் தெறி ரூ 45 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சூர்யாவின் 24 ரூ 30 கோடி வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ரூ 13 கோடி, அரண்மனை-2 ரூ 9.5 கோடி, சிம்புவின் இது நம்ம ஆளு ரூ 5 கோடி, மாதவனின் இறுதிச்சுற்று ரூ 4.2 கோடி, மிருதன் ரூ 4, காதலும் கடந்து போகும் ரூ 3.5 கோடி, இறைவி ரூ 2.1 கோடி, சேதுபதி ரூ 2 கோடி முறையே வசூல் செய்து உள்ளது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: 2016-ம் ஆண்டில் வெளிநாட்டில் வசூலை அள்ளிய டாப் 10 படங்கள் - முதலிடம் பெற்றது யார் தெரியுமா? Rating: 5 Reviewed By: news7