இந்திய அணியின் இயக்குநராக ஒரு ஆண்டுக்கும் மேலாக பதவி வகித்த ரவி சாஸ்திரிக்கும் அனில் கும்பிளேவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.
இருப்பினும், ரவி சாஸ்திரியை நிராகரித்த, சச்சின் தெண்டுல்கர் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் அடங்கிய குழு அனில் கும்பிளேவை தேர்வு செய்தது. முன்னதாக பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் ரவிசாஸ்திரி கலந்து கொண்ட போது, கங்குலி கலந்து கொள்ளவில்லை. எனவே ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்படாததற்கு கங்குலிதான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. இதனால் ரவிசாஸ்திரி கங்குலியை கடுமையாக விமர்சித்தார். அவருக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக முட்டாள்கள் உலகில் ரவி சாஸ்திரி வாழ்வதாக கங்குலி விமர்சித்தார். இதனிடையே ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்டாத விவகாரம் குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மஞ்ச்ரேகர் கூறுகையில், கங்குலியை விட ரவி சாஸ்திரிதான் தன்னை நிராகரித்ததால் பெரும் கோபத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார். இது அவருக்கு புதிய அனுபவம். இருப்பினும் பயிற்சியாளர் தேர்வில் பிசிசிஐ சிறந்த தேர்வையே நிகழ்த்தியுள்ளது என்று கூறியுள்ளார். பேடி வெளியிட்டுள்ள கருத்தில், தனக்குப் பதவி கிடைக்காததை விட தேர்வு நடந்த முறைதான் சாஸ்திரியை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அது நியாயமானதும் கூட. ஒருவர் மட்டும் வித்தியாசமாக செயல்பட்டுள்ளதாக சாஸ்திரி கூறியுள்ளார். இதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
0 comments:
Post a Comment