விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மனம்’ உள்ளிட்ட படங்களில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் சமந்தா. இப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழுவதாகவும் கூறப்பட்டது. நிச்சயதார்த்தம் கூட முடிந்துவிட்டது என்று செய்திகள் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. இதை நாகார்ஜுனா குடும்பத்தினரும் மறுக்கவில்லை.
ஆனால் நாகார்ஜுனா குடும்பத்தில் இன்னொருவரும் திருமணத்துக்கு ரெடி ஆகிவிட்டார். அவர் அக்கினேனி அகில். நாகார்ஜுனா - அமலா மகனான அகில் சமீபத்தில்தான் சினிமாவில் அறிமுகமாகி ஹிட் அடித்தார். அவர் காதலிப்பது ஷ்ரேயா பூபாலை. இவர் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல டிசைனர். மிகப்பெரும் தொழிலதிபரான ஷாலினி பூபாலின் மகள். அகிலுக்கு 22 வயதுதான் ஆகிறது. முதல் படம் தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதுபற்றி கேட்டால், "நான் இப்போதே திருமணமாகி செட்டில் ஆகிவிட முடிவு செய்துவிட்டேன். திருமணத்துக்கு பின்னர் கேரியரில் மட்டுமே கவனம் இருக்கும் அல்லவா? அதுதான் காரணம்," என்று பதிலளித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment