Latest News
Monday, June 27, 2016

நாங்களும் நாடகங்கள் போடத்தொடங்கினால், நாட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் கேள்வி

டெல்லியை ஆட்சி செய்துவரும்  கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும், மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல்  நிலவி வருகிறது.


பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., தினேஷ் மோஹனியா சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனால் கொந்தளித்துப்போன முதல்-அமைச்சர் கெஜ்ரிவால், டெல்லியில் பிரதமர் மோடி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார் என கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் போர்க்கொடி உயர்த்தி வருகிற நிலையில், அவருக்கு மத்திய அரசின் சார்பில் உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். இது தொடர்பாக டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


கெஜ்ரிவாலின் கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது என்று நாங்கள் கருதுகிறோம். ஒரு பெரிய நாட்டை வழிநடத்திச் செல்லுகிற பொறுப்பில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். நாட்டுக்கு சேவையாற்றுகிற பொறுப்பினை மக்கள் எங்களுக்கு வழங்கி உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் ஏகோபித்த தீர்ப்பின்மூலம் டெல்லியில் சேவையாற்றுகிற வாய்ப்பினை ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பை இழந்து வருகின்றனர். அவர்கள் நாடகம் நடத்தி வருகின்றனர். நாங்களும் அவர்களைப் போன்றே செயல்பட ஆரம்பித்தால், அரசாங்கத்தை யார் வழிநடத்திச் செல்வது?

பிரதமர் தனது அலுவல்களில் எப்போதும் மும்முரமாக இருக்கிறார். அவர் எப்போதும் நாட்டு மக்கள் நலனை எண்ணி வருகிறார். அவர்களுக்காக உழைத்து வருகிறார். நாட்டைப்பற்றியே சிந்தித்து வருகிறார்.

கெஜ்ரிவால் அவர்களே, உங்களின் ஒவ்வொரு அறிக்கைக்கும் பதில் சொல்ல யாருக்கு நேரம் இருக்கிறது? இந்த நாடகதாரிகள் போன்று நாங்களும் நாடகங்கள் போடத்தொடங்கினால், நாட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்?
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நாங்களும் நாடகங்கள் போடத்தொடங்கினால், நாட்டை யார் பார்த்துக்கொள்வார்கள்? கெஜ்ரிவாலுக்கு மத்திய அமைச்சர் கேள்வி Rating: 5 Reviewed By: velmurugan