Latest News
Sunday, July 3, 2016

சைமா விருது 2016 : விருது பெற்றவர்கள் முழு விவரம்



தென்னிந்திய திரையுலகினரை கவுரவித்து வழங்கப்படும் 'சைமா 2016' விருது வழங்கும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1 நடைபெற்ற 6-வது சைமா விருது வழங்கும் விழாவில் ஏராளமான தென்னிந்திய திரை பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகருக்கான விருதை 'ஐ' படத்திற்காக  விக்ரமும், சிறந்த நடிகைக்கான விருதை 'நானும் ரவுடிதான்' படத்திற்காக நயன்தாராவும் பெற்றுள்ளனர்.

விருது பெற்ற  பிரபலங்களின் முழு பட்டியல்

சிறந்த நடிகர் : சீயான் விக்ரம் (ஐ)

சிறந்த நடிகை : நயன்தாரா (நானும் ரவுடிதான்)

சிறந்த படம் : தனி ஒருவன்


சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரவுடிதான்)

சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் (நானும் ரவுடிதான்)

சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (ஓ காதல் கண்மணி)

சிறந்த வில்லன் நடிகர் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)

சிறந்த காமெடி நடிகர் : ஆர்.ஜே. பாலாஜி (நானும் ரவுடிதான்)

சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)

சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)

சிறந்த துணை நடிகர் : பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)

சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார் (தங்கமகன்)

சிறந்த பின்னணி பாடகர் : அனிருத் (பாடல்: தங்கமே உன்னத்தான்.., படம்: நானும் ரவுடிதான்)

சிறந்த பின்னணி பாடகி : ஸ்வேதா மோகன் (பாடல்: என்ன சொல்ல.., படம்: தங்கமகன்)

நிகழ்ச்சியின் சிறப்பு விருதுகள் :

வாழ்நாள் சாதனையாளர் விருது : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மற்றும் பழம்பெரும் தயாரிப்பாளர், இயக்குனர் பஞ்சு அருணாச்சலம்

சிறந்த விமர்சக நடிகர் : ஜெயம் ரவி (தனி ஒருவன்)

சிறந்த விமர்சக நடிகை : நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)

தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது : சமந்தா. 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சைமா விருது 2016 : விருது பெற்றவர்கள் முழு விவரம் Rating: 5 Reviewed By: news7