நேற்றுமுன்தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொலையாளி ராம்குமார் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை கண்விழித்தார்.
அப்போது சென்னையில் இருந்து சென்றிருந்த முதன்மை புலன் விசாரணை அதிகாரி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜ் கொலையாளி ராம்குமாரை பார்த்தார்.
ராம்குமாரிடம் எதற்காக சுவாதியை கொலை செய்தாய்? என்று கேட்டார். அதற்கு ராம்குமார், ‘நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன். 3 முறை என்னுடைய காதலை சொல்லியும் ஏற்கவில்லை. என்னை கேவலப்படுத்தினார் அவமானப்படுத்தினார். இது எனது மனதுக்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கொலைவெறியாக மாறியது. எனவே சுவாதியை தீர்த்துக்கட்டினேன்.’ என்று மெல்லிய குரலில் ராம்குமார் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
எனினும் ராம்குமாரால் அதிக நேரம் பேச முடியாததால் முழு வாக்குமூலத்தை போலீசாரால் பெற முடியவில்லை.
எனவே அவர் பூரண குணமடைந்து நன்றாக பேசும் நிலைக்கு வரும்போது அவரிடம் மீண்டும் வாக்குமூலத்தை போலீசார் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment