‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்த பின்பு கடந்த மே மாதம் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் திடீரென்று அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். அங்கு 45 நாட்களுக்கு மேலாக ஓய்வு எடுத்துவருகிறார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இதனை குடும்பத்தினர் மறுத்தனர். அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ‘கபாலி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் அவர் ஊரில் இல்லாமலேயே இணையதளங்களில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் வரவேற்பை பெற்றன. அடுத்து ‘கபாலி’ படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டு இருக்கிறது. ஜூலை 1–ந்தேதி ‘கபாலி’ வெளிவரும் என்று தகவல் பரவி பின்னர் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததால் 15–ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. படம் தணிக்கையான பிறகே ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு கூறி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் ‘கபாலி’ வெளியாகிறது. தமிழ் பதிப்புக்கான தொழில் நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளதால் ஓரிரு நாளில் அது தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு இந்தி, தெலுங்கு, மலாய் மொழிகளில் தணிக்கை செய்யப்படும்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு அடுத்த வாரம் சென்னை திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வந்ததும், ‘கபாலி’ ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
கபாலி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. விமானத்திலும் மலேசிய வாகனங்களிலும், திரையங்குகளிலும் நூதன முறையில் ‘கபாலி’ பட போஸ்டர்கள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் அமைத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
0 comments:
Post a Comment