நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை அடுத்த மீனாட்சிபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 24) இவரது தந்தை பெயர் பரமசிவம். தென்காசியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் கடந்த 6 மாதங்களாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். இவர் சுவாதியை ஒரு தலையாக காதலித்து உள்ளார். இதற்கு சுவாதி சம்மதிக்காததால் சுவாதியை அவர் வெட்டிக்கொலை செய்துள்ளார். சுவாதியை கொன்று விட்டு அவர் தலைமறைவாக இருந்தார். ராம்குமார் அவரது ஊரில் மறைந்து இருக்கும் தகவல் அறிந்து சென்னையில் இருந்து சுவாதி கொலை வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் நேற்று இரவு மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமாரின் வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். போலீசார் அவரை காப்பாற்றி செங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் தேவராஜன் தலைமையில் தனிப்படை போலீசார்நெல்லைக்கு வந்துள்ளனர்
0 comments:
Post a Comment