Latest News
Saturday, July 2, 2016

சுவாதி கொலை வழக்கு: குற்றவாளி ராம்குமார் நெல்லையில் கைது



சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி மர்ம நபர் ஒருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் கொலையாளி சிக்கவில்லை. அவன் தப்பிச்செல்லும் போது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான கொலையாளியின் உருவத்தை வைத்து  போலீசார் தேடி வந்தனர்.


இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக  நெல்லையில்  ராம்குமார் என்பவரை போலீசர் கைது செய்துள்ளனர். பொறியல் பட்டதாரியான ராம்குமார் செங்கொட்டையை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று மாதங்களாக சூளைமேட்டில் வசித்துவந்துள்ளார். சுவாதி கொலை செய்த்தை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

செங்கோட்டையில்  பன்மொழி அருகே உள்ள மீனாட்சி புரத்தை சேர்ந்த இவர், சுவாதியை கொலை செய்த அடுத்த நாள் நெல்லைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு வீட்டிலேயே முடங்கியிருந்த ராம்குமார், போலீசார் கைது செய்ய முயன்றபோது  கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து,நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுவாதியை ஒருதலையாக காதலித்ததாகவும் ,தனது காதலை சுவாதி ஏற்காததால் வெறுப்படைந்த ராம்குமார் நண்பன் ஒருவன் உதவியுடன் கொலை செய்ததாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையாளி ராம்குமாரை சென்னை கொண்டுவர போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராம்குமாரின் தந்தை, தாய் மற்றும் தங்கையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

english summery: Swathi murder suspect held in Tirunelveli, tries to kill self
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சுவாதி கொலை வழக்கு: குற்றவாளி ராம்குமார் நெல்லையில் கைது Rating: 5 Reviewed By: news7