Latest News
Thursday, November 6, 2025

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அப்பெண் இந்தியாவின் தாஜ்மகாலுக்குச் சென்று திரும்பிய பின்னரே இது நிகழ்ந்ததாக ஒரு கதை பரவி வருகிறது. ஆனால், இந்த முழு சம்பவமும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

AI

வைரலான கதை என்ன?

X மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனை அறையில் ஒரு பெண் இரண்டு கருப்பான குழந்தைகளுடன் காணப்படுகிறார், அவரது கணவர் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் நிற்கிறார். "என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்க்க இந்தியாவிற்குச் சென்றார்" என்று கூறி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியதாக ஒரு கதை இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது.​

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் உள்ள நபர்களின் அசைவுகள் மற்றும் தோற்றம் இயல்புக்கு மாறாக இருப்பதால், இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர்.

இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 'Grok', இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று அறிவித்துள்ளது.

”இந்த வீடியோ ஒரு டிக்டாக் பக்கத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட AI-உருவாக்கிய கிளிப் என்றும், தாஜ்மஹால் பயணம் குறித்த கதை, ஒரு கற்பனையே தவிர, உண்மையான சம்பவம் அல்ல" என்றும் அது விளக்கியுள்ளது. AI மூலம் இதுபோன்ற வீடியோக்கள் சித்தரிக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக விரோத கருத்துகளை பரப்புவதற்கு வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற காணொளிகளை கவனத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன? Rating: 5 Reviewed By: gg