Latest News
Sunday, June 2, 2013

மாற்றான் இயக்குனர் படத்துக்காக 150 நாட்கள் கால்சீட் கொடுத்த தனுஷ்!


ஒரு படத்தை முப்பது நாட்களில் படமாக்கி முடித்த காலமும் இருந்தது. அப்படி 30 நாட்களில் படமாக்கப்படும் படங்கள் 100 நாள், 150 நாள் என்று வெற்றிகரமாக ஓடி சாதனையும செய்துவந்தன. அதோடு, 20 முதல் 30 லட்சம் பட்ஜெட்டில்தான் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நிலைமையே வேறு, 50 கோடி, 100 கோடி பட்ஜெட்டெல்லாம் சாதாரணமாகி விட்டது. மேலும், நான்கு படங்கள் அளவுக்கு ஒரே படத்தை படமாக்குகிறார்கள். இதனால் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு படத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி உருவாகும் படம் ஒரு வாரம்கூட தியேட்டரில் நிற்பதில்லை. இது இன்றைய காலம்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம். இதைப்பற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, அடேயபபா 150 நாளா? நான் இரண்டு படத்துக்கே இவ்வளவு கால்சீட் கொடுத்ததில்லையே என்று வாயை பிளந்தாராம். அதற்கு நான் எடுக்கப்போகும் படம் அப்படி. அதற்கு இவ்வளவு கால்சீட் கட்டாயம் வேண்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். அதோடு தனுஷின் வழக்கமான சம்பளத்தைவிட இப்படத்துக்காக அதிகமாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அதன்பிறகு ஏன் வாயை திறக்கப்போகிறார் தனுஷ். படப்பிடிப்புக்கு எப்போ போலாம் என்று மட்டும்தான் கேட்டாராம். 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மாற்றான் இயக்குனர் படத்துக்காக 150 நாட்கள் கால்சீட் கொடுத்த தனுஷ்! Rating: 5 Reviewed By: gg