பிரியாணி படப்பிடிப்புக்கு நடுவில் சில வாரங்கள் நிறுத்தப்பட்டதற்கு காரணம் வெங்கட் பிரபுவுக்கும் அப்படத்தின் ஹீரோ கார்த்திக்கும் நடுவே ஏற்பட்ட சலசலப்புதான் என்பது அனைவரும் அறிந்ததொரு விஷயம். |
எப்படியோ சமாதானமாகி மீண்டும் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். அனால் மறுபடியும் ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. சென்னையில் வெயில் 100 டிகிரியை தாண்டி வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் நடுவில் தனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு கூட போகாமல் ஸ்பாட்டிலேயே அமர்ந்திருக்கிற அளவுக்கு தொழிலில் அக்கறை காட்டி வருகிறார். ஒருநாள் இவர் இப்படியே அமர்ந்திருக்க, கிளம்பிப் போன வெங்கட் பிரபு வரவேயில்லையாம். அடுத்த ஷாட்டுக்கான டிஸ்கஷனில் இருக்கிறார் போலும் என்று நினைத்துக் கொண்டிருந்த கார்த்தி ஒருகட்டத்தில் பொறுமை இழந்து வெங்கட் பிரபுவின் ரூம் கதவை திறந்து கொண்டு நுழைந்தால் அங்கே அவர் தன் சகாக்களுடன் டேபிள் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாராம். நெஞ்சை பிடித்துக் கொள்ளாத குறைதான். அதிர்ச்சியான கார்த்தி என்ன செய்றீங்க இங்கே என்று கேட்க, இந்த வெயிலில் ஷுட்டிங் எடுக்க முடியுமா. மூணு மணிக்கு மேல பார்த்துக்கலாம் என்றாராம் வெங்கட். நல்ல ஆளுங்கப்பா என்று முணுமுணுத்துக் கொண்டே கிளம்பியதாம் சிறுத்தை. உறும வேண்டிய இடமா இருந்தாலும் இறுமிதான் ஆகணும். ஏனென்றால் இப்படம் கிட்டதட்ட கார்த்தியின் சொந்தப்படம் மாதிரி..! |
Sunday, June 2, 2013
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment