1 நீண்ட இடைவெளிக்கு பின் என்ட்ரி கொடுத்துஇருக்கிறீர்களே?
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி, வெளிநாடுகளில் மெகா தொடர் தயாரித்து கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதில் பிசியாகி விட்டேன். சமீபத்தில், சில தமிழ் படங்களை பார்த்தபோது, மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. "பிரியாணி, மாசாணி படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்ததால், மீண்டும் களத்தில் குதித்து விட்டேன்.
2 மீண்டும் நடிக்க வந்ததற்கு, ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதா?
இனியாவுடன் நான் நடித்த காதல் காட்சிகளை, தியேட்டரில் ரசிகர்கள், விசிலடித்து கொண்டாடுகின்றனர். எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள் பலர், இன்னும் நான், இளமையுடன் இருப்பதாக கூறுகின்றனர். நிறைய கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். சிகரெட் பிடிப்பது இல்லை. அசைவம் சாப்பிடுவது இல்லை. யோகா, உடற்பயிற்சி செய்கிறேன். "மாசாணியில், என்னுடன் நடித்த இனியா சாப்பிடுவதில், பாதி அளவு தான், நான் சாப்பிடுகிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
3 திரையுலகில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதை உணருகிறீர்களா?
ஆம். தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறும்பட இயக்குனர்கள் அதிக அளவில் திரைத் துறைக்கு வந்துள்ளனர். ஒவ்வொருவரும், ஒரு புதிய சிந்தனையுடன் வருகின்றனர். ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.
4 பெயர் வாங்கி கொடுத்த படங்களாக எதை கூறுவீர்கள்?
செந்தூரப்பூவே, சின்னப் பூவே மெல்லப் பேசு, மருதுபாண்டி போன்ற படங்களை கூறலாம். தமிழில், நான் நடித்த, 20 படங்கள், நூறு நாளுக்கு மேல் ஓடியவை. தெலுங்கிலும், விஜயசாந்தியுடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்களுக்கும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோன்ற படங்களில், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
5 படம் இயக்கும் எண்ணம் உண்டா?
அந்த ஆசை இருக்கிறது. புதிதாக ஒரு கதை, ரெடி செய்து வைத்துள்ளேன். நடிகர், நடிகைகளுடன் பேசி வருகிறேன் முன்பு போல், நானும் வேலை செய்கிறேன் என்பது போல், சாதாரணமாக இருந்து விட முடியாது. சின்சியராக உழைத்தால் தான், வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் பேசப்படும் அளவுக்கு, ஒரு படத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது, என் விருப்பம்.
0 comments:
Post a Comment