Latest News
Tuesday, June 4, 2013

மரியானில் கவர்ச்சிக்கு உத்தரவாதம்! வெளிப்படையாக பேசும் பார்வதி

பூ படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அதன்பிறகு நிறைய கண்டிசன்களை அள்ளி வீசினார். குறிப்பாக, கதை என்னைச்சுற்றிதான் இருக்க வேண்டும்.
பாடல் காட்சிகளில் ஹீரோக்களுடன் அதிக நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்பது பார்வதியின் முக்கியமான கண்டிசன்களாக இடம்பெற்றிருந்தன.
இந்த கண்டிசன்கள் கோலிவுட் இயக்குனர்களுக்கு வெறுப்பாக இருந்தபோதும், அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால் சிலர் வாய்ப்பு கொடுக்கவும முன்வந்தனர்.
ஆனால், பூ படத்தின் தோல்வியை கருத்தில் கொண்டு படாதிபதிகள் பார்வதிக்கு சான்ஸ் கொடுக்க தயங்கினர். அதனால் அடுத்தபடியாக படவாய்ப்பு இல்லாமல் கேரளாவுக்கு சென்று செட்டிலாகியிருந்தார் பார்வதி.
அப்படி சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவரை மரியான் படத்துக்காக மீண்டும் கொண்டு வந்தார் பரத்பாலா.
ஆனால், மறுபிரவேசம் செய்துள்ள பார்வதியிடம் பழைய கண்டிசன்கள் எதுவுமே இல்லை. மரியான் படத்தில் தனுசுடன் அதிக நெருக்கமாக நடித்துள்ளார். அதிலும் ரொமான்ஸ் காட்சிகளில் ஏக கிளுகிளுப்பாக நடித்துள்ளாராம்.
இதைப்பார்த்து மேலும் சில இயக்குனர்களும் புதிய படங்கள் விசயமாக பார்வதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம், கதைக்கு தேவையென்றால் ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிக்கிறேன் என்று கூறியுள்ள அவர், பாடல் காட்சிகளில் மாடர்ன் டிரஸ் அணிந்து கவர்ச்சிகரமாக நடிக்கவும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மரியானில் கவர்ச்சிக்கு உத்தரவாதம்! வெளிப்படையாக பேசும் பார்வதி Rating: 5 Reviewed By: gg