தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் போன்று மிகவும் அடக்கமாக இருப்பதாக இந்தி நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா இந்தி படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லரைப் பார்த்த அனில் தனது மகளிடம் தனுஷை பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். தனுஷின் நடிப்பை நாள் முழுவதும் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்துடன் 2 படங்களில் நடித்துள்ள அனில் தனுஷிடம் அவரது மாமனாரின் குணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தனுஷை சந்தித்த அனில் மாப்பிள்ளையிடம் அப்படியே மாமனார் போன்று தன்னடக்கம் இருப்பதைப் பார்த்துள்ளார்.
ரஜினி என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பெருமை அடித்துக்கொள்ளாமல் இருப்பது போன்று தனுஷும் இருப்பதாக அனில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment