Latest News
Tuesday, June 4, 2013

நேரம் ஒத்துழைத்தால் 'சிங்கம்-3' படத்திலும் நடிக்க விரும்புகிறேன்: நடிகர் சூர்யா பேட்டி

'சிங்கம்-2' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா கூறியதாவது:-

சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும்.

இயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: நேரம் ஒத்துழைத்தால் 'சிங்கம்-3' படத்திலும் நடிக்க விரும்புகிறேன்: நடிகர் சூர்யா பேட்டி Rating: 5 Reviewed By: gg