Latest News
Wednesday, June 5, 2013

தனுஷ்-வெற்றிமாறன் கைகோர்க்கும் 'காக்கா முட்டை'

இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் இருவரும் பொல்லாதவன், ஆடுகளம் என்ற இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த இருவரும் இணைந்துள்ளனர். ஆனால் நடிகர்-இயக்குனர் என கூட்டணி சேராமல் தயாரிப்பாளர் என்ற வகையில் இருவரும் சேர்ந்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு 'காக்கா முட்டை' என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். தனுசின் ’WUNDERBAR FILMS’ நிறுவனமும், வெற்றிமாறனின் 'GRASS ROOT FILM COMPANY'யும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். பிற கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காக்கா முட்டை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உளளன.

போஸ்டரை வைத்துப் பார்க்கும் போது, 'காக்கா முட்டை' சிறுவர்களுக்கான கதை என்ற எண்ணம் தோன்றுகிறது. சென்னையில் உள்ள சேரிப்பகுதியில் வாழும் சிறுவர்களை பற்றிய கதை என்றும், மொத்தப் படப்பிடிப்பையும் சேரிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தனுஷ்-வெற்றிமாறன் கைகோர்க்கும் 'காக்கா முட்டை' Rating: 5 Reviewed By: gg