Latest News
Wednesday, June 5, 2013

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

90வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலைத் தாண்டி கருணாநிதியுடன் நட்பு பாராட்டி வருபவர் ரஜினிகாந்த். கருணாநிதியை இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஸ்டேட்ஸ்மேன், அன்புக்குரிய நண்பர் என்றே அவர் எப்போதும் கூறிவந்துள்ளார்.
கருணாநிதியும் ரஜினி விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். அவர் படங்களின் முதல் ரசிகராக இருந்து பாராட்டுவதும் வாழ்த்துவதும் வழக்கம்.
கருணாநிதி முதல்வராக இருந்த 2011-ல் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்து போய் ரஜினியைப் பார்த்து நலம் விசாரித்தார். அடுத்த சில தினங்களில் ஆட்சியே மாறியது. கருணாநிதி முன்னாள் முதல்வரானார். உடல் நிலை தேறி வீடு திரும்பிய ரஜினி நேரில் போய் கருணாநிதியைப் பார்த்து நலம் விசாரித்து, நன்றி தெரிவித்துவிட்டு வந்தார்.
இந்த ஆண்டு 90 வயதில் அடியெடுத்து வைக்கும் கருணாநிதிக்கு, தொலைபேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த ரஜினி, நூறு ஆண்டுகளைத் தாண்டியும் நலமோடு நீங்கள் வாழ வேண்டும் என்று கூறினார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து! Rating: 5 Reviewed By: gg