Latest News
Monday, June 3, 2013

அமீர்கானை சந்திக்க காத்திருக்கிறேன்: பில்கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய செல்வந்தரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
பில் அன்ட் மிலின்டா கேட்ஸ் பவுன்டேசனை பில் கேட்ஸ் நிறுவி, அதன் மூலம் பல மனித நேயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பில் கேட்ஸ் தனது இணையத்தளத்தில், பாலிவுட் நடிகரும், சமூக சேவகருமான அமீர்கானைச் சந்திக்க நான் காத்துக் கொண்டிருகிறேன்.
யுனிசெப்பின் குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டத்தின் தூதராக உள்ள அவரின் பணியை குறித்து அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தியா சந்தித்து வரும் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்திய சத்ய மேவ ஜேயதே நிகழ்ச்சி பற்றியும் அவரிடம் கேட்க விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமீர் கான், சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தினர்.
மேலும் அரசியல்வாதிகள் பல்வேறு பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கவும் இந்த நிகழ்ச்சி தூண்டுகோலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அமீர்கானை சந்திக்க காத்திருக்கிறேன்: பில்கேட்ஸ் Rating: 5 Reviewed By: gg