Latest News
Monday, June 3, 2013

சூட்டிங்கில் விபத்து! விக்ரம் பிரபு காயம்!!

சினிமா சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விக்ரம் பிரபு காயம் அடைந்தார். கும்கி பட கதாநாயகனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தற்போது, திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரியில் நடந்த சூட்டிங்கில், விக்ரம் பிரபு மீது ஒரு கார் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை படமாக்கும்போது, விக்ரம் பிரபுவை கயிறு கட்டி தூக்கினார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து, விக்ரம் பிரபு கீழே விழுந்தார். அதில், அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் எந்த பாதிப்பும் இல்லாததால், விக்ரம் பிரபு சிறிது நேர ஓய்வுக்குப்பின், படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சூட்டிங்கில் விபத்து! விக்ரம் பிரபு காயம்!! Rating: 5 Reviewed By: gg