Latest News
Wednesday, June 5, 2013

இளையராஜா இசையில் பாட்டு எழுதும் வாய்ப்பு: மறுத்த மதன் கார்க்கி

இசைஞானி இளையராஜா-கவிப்பேரரசு வைரமுத்து இருவரும் இணைந்து பணியாற்றி பல வருடங்கள் ஆகி விட்டன. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபங்களால் இருவரும் பிரிந்து இருந்தாலும், இவர்களின் வாரிசுகள் யுவன் ஷங்கர் ராஜா-மதன் கார்க்கி இருவரும் வெங்கட்பிரபுவின் ‘பிரியாணி’ படத்தில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவைத் தொடர்ந்து இளையராஜா இசையில் மதன் கார்க்கி பாடல் எழுதப் போவதாக சில நாட்களுக்கு முனனர் செய்திகள் வெளியானது. இதனால் வைரமுத்து-இளையராஜா இருவரும் மீண்டும் சேர்வதற்கான சந்தர்ப்பம் உருவாகி இருப்பதாக கோடம்பாக்கமே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் இந்த செய்தியை மறுத்து இருக்கிறார் மதன் கார்க்கி.

இது குறித்து, மிஸ்கின் இயக்கும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு இளையராஜா சார் இசையில் நான் பாடல் எழுதுவதாக செய்திகள் வெளியாகி உளளன. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை. உண்மையிலேயே இசைஞானி இசையில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோசப்படுவேன் என்று ட்வீட் செய்திருக்கிறார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இளையராஜா இசையில் பாட்டு எழுதும் வாய்ப்பு: மறுத்த மதன் கார்க்கி Rating: 5 Reviewed By: gg