Latest News
Monday, June 3, 2013

தீக்குளித்த முத்துக்குமாரை ரோல் மாடலாகக் கொண்டு நடிக்கும் கெளதம்!

ஈழத்தமிழர்களின் நலனுக்காக தீக்குளித்து உயிர்நீத்தவர் முத்துக்குமார். இவர் உயிரைவிட்ட அந்த நேரத்திலேயே அவரது தியாகத்தை முன்வைத்து ஒரு படம் உருவாவதாக இருந்தது. ஆனால், அது என்ன ஆனதோ தெரியவில்லை. இந்த நிலையில், தற்போது முத்துக்குமாரை ரோல் மாடலாகக்கொண்டு சிப்பாய் என்ற படத்தில் நடிக்கிறார் கடல் கெளதம். இப்படத்தை சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இயக்குகிறார். இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

முத்துகுமாரின் மரணம் தமிழ்நாட்டையே பற்றி எரிய வைத்த பரபரப்பான சம்பவம் என்பதால், இந்த படம் வெளியாகிற நேரத்தில் தானும் பரபரப்பாக பேசப்படுவோம் என்று எதிர்பார்க்கிறார் கெளதம். அதனால் வழக்கமான காதல், காமெடி காட்சிகளை விட அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தப்போகிறாராம் கெளதம். அதோடு தனது ஹேர்ஸ்டைல், பாடி லாங்குவேஜ் என அனைத்தையும் முத்துக்குமாரைப்போன்றே மாற்றி நடிக்கிறாராம் அவர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தீக்குளித்த முத்துக்குமாரை ரோல் மாடலாகக் கொண்டு நடிக்கும் கெளதம்! Rating: 5 Reviewed By: gg