Latest News
Sunday, August 11, 2013

விருது முக்கியமல்ல, கரன்சியே முக்கியம்! தமன்னா கொடுத்த ஷாக்!!

தற்போது அஜீத்துடன் சிறுத்தை சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. முதல் ரவுண்டில் நடித்ததற்கு துளியும் குறைவில்லாத கவர்ச்சி கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள தமன்னா, ஆரம்பத்தில் சம்பள விசயத்தில்தான் கொஞ்சம் எக்குத்தப்பாக பேசிக்கொண்டு திரிந்தார். ஆனால், அப்படி பேசியதின் விளைவாக இரண்டு படங்கள் வேறு நடிகைகள் பக்கம் சாய்ந்ததால் இப்போது வாய் திறப்பதே இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், இப்படியே அமைதியாக இருந்தாலும் வேலைக்கு ஆகாது என்று சில மேல்தட்டு ஹீரோக்களுக்கு தூது விடும் திரைமறைவு வேலைகளிலும் இறங்கியுள்ளார் அம்மணி. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர் என்பதால், பழைய நட்பை இப்போது புதுப்பித்து வரும் தமன்னா, மீண்டும் டூயட் பாடுவதற்காக வாய்ப்புகளை உருவாக்கித்தருமாறு அவர்களிடம் நெஞ்சார்ந்த வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இதற்கிடையே கருத்து சொல்லும் படங்களை கொடுக்கும் இயக்குனர் ஒருவர் சமீபத்தில் தமன்னாவை அழைத்து தனது படத்தில் ஒரு வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தமன்னாவை கேட்டுக்கொண்டாராம். வேலைக்காரி என்றால் சிறிய கேரக்டர் இல்லை. படத்தின் கதாநாயகிதான். இதில் நடித்தால் விருது கிடைக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என்றும் தெளிவு படுத்தினாராம்.

ஆனால், அதற்கு தடாலடியாக மறுத்து விட்டாராம் தமன்னா. அந்த மாதிரியான கருத்து சொல்லும் கலைப்படங்களில் நடித்தால் கமர்சியல் கதாநாயகி அந்தஸ்து போய் விடும். விருதுககு ஆசைப்பட்டு கரன்சியை இழக்க நான் தயாரில்லை என்று சொல்லி இயக்குனருக்கு பலத்த ஷாக் கொடுத்து விட்டாராம் தமன்னா.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: விருது முக்கியமல்ல, கரன்சியே முக்கியம்! தமன்னா கொடுத்த ஷாக்!! Rating: 5 Reviewed By: gg