Latest News
Sunday, August 11, 2013

சூர்யாவை குழப்பி விட்ட இயக்குனர்கள்!

 சிங்கம்-2 படத்திற்கு முன்பே, அடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதாக கூறி வந்தார் சூர்யா. அதேபோல் படத்தை ஆரம்பிக்கப்போவதற்கான அடையாளமாக கெளதம்மேனனின் அலுவலகத்திலேயே பூஜை போட்டார்கள். அதில் சூர்யா, பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆனால், அதன்பிறகு என்ன நடந்ததோ சூர்யாவுக்கு கதை பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போவதாக சொன்னார்கள். ஆனால், அவர் சூர்யாவிடம் சொன்ன கதையும், சீமானின் பகலவன் கதையும் ஒன்றாக இருந்ததால் அதிலும் குழப்பம். அதனால் இப்போது புதிய கதையை லிங்குசாமி உருவாக்கி வருவதாக செய்தி பரவியுள்ளது.

இதனால், இப்போதைக்கு கெளதமும் இல்லை, லிங்குசாமியும் இல்லை. அப்படியென்றால் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது என்று யோசித்த சூர்யா, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி சொன்ன கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சூர்யாவை குழப்பி விட்ட இயக்குனர்கள்! Rating: 5 Reviewed By: gg