Latest News
Saturday, August 10, 2013

தலைவா பிரச்னை: விஜய்க்கு ஆதரவாக ஆளும் அரசை தைரியமாக தாக்கிய ஆண்மகன் தனுஷ்

விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது திரையுலகத்தை சேர்ந்த பல நடிகர் நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் அவருக்கு ஆதரவாக அவர் வீட்டில் கூடிய காட்சிகள் இப்போதும் நினைவிருக்கும். அன்று மீடியாவை துணிச்சலாக சந்தித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் கமல்.

ஆனால் விஜய் அமைதியாக இருந்தாலும், அவருக்கு ஆதரவாக கிளம்ப வேண்டிய திரையுலகமும் அமைதியாகவே இருக்கிறது. ஏன்? எந்த பிரச்சனைக்கும் அவரும் வருவதில்லை, நாமும் போகப் போவதில்லை என்கிற நிலைபாடுதானாம் அது. இதற்கிடையில் ஒரே ஒரு ஆண் மகனாக களத்தில் இறங்கி கருத்தை வீசியிருக்கிறார் தனுஷ்.

'நாட்ல என்ன நடக்குதுன்னே புரியல' என்று வருத்தம் தெரிவித்திருக்கும் அவர், 'இந்த படத்தை முடக்க நினைச்ச நேரத்தில் நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்வதை பற்றி யோசித்திருந்தால் இந்த நாடு முன்னேற்றம் அடையும்' என்று ட்விட்டரில் பொங்கியிருக்கிறார்.

இந்த அட்வைஸ் யாருக்கு என்று அவர் குறிப்பிட்டு சொல்லாவிட்டாலும், இவருக்கு ஏனிந்த வேலை என்ற குமுறல்களும் எழுந்திருக்கிறது. தனுஷ் நையாண்டி செய்யவில்லை, சீரியசாகவே பேசியிருக்கிறார் என்பதை அவர் நடித்த நய்யாண்டி சமயத்தில் யாராவது ஞாபகப்படுத்தாமல் இருக்கணும். அதுதான் இப்போதைய கவலை!

  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

  1. தமிழ் திரையுலகின் உண்மையான ஆண்மகன் தனுஷ்தான்

    ReplyDelete

Item Reviewed: தலைவா பிரச்னை: விஜய்க்கு ஆதரவாக ஆளும் அரசை தைரியமாக தாக்கிய ஆண்மகன் தனுஷ் Rating: 5 Reviewed By: gg