நடிகர் விஷால் நடிப்பதோடு மட்டுமின்றி விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் சுசீந்திரன் இயக்கும் ‘பாண்டிய நாடு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் இவரே நடிக்கவும் செய்கிறார்.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படத்தை தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட முடிவு செய்துள்ளாராம். இப்படம் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.
இதற்கு பின் தொடங்கப்பட்ட 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தை சுந்தர் சி வெளியிட்டுவிட்டார். ஆனால் மத கஜ ராஜாவை வாங்க ஆளில்லாமல் ரிலீஸ் ஆவதில் தடை ஏற்பட்டது. எனவே விஷால் தான் புதிதாக தொடங்கிய படக்கம்பெனி மூலம் சொந்தமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார். படத்தை செப்டம் ஆறாம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
அதே தேதியில்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படமும் வெளியாகவிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களத்தில் குதிக்க தயாராகி வருகிறார் விஷால்.

0 comments:
Post a Comment