சென்னை: தசாவதாரம் படத்தை அடுத்து கமல் ஹாஸனுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் அசின். கோலிவுட்டில் நன்றாக வந்து கொண்டிருந்தபோதே பாலிவுட்டுக்கு தாவினார் அசின். மும்பையில் செட்டிலான பிறகு தமிழ், தெலுங்கு படங்கள் பக்கம் அவர் திரும்ப தயாராக இல்லாமல் இருந்தார். ஆனால் அம்மணிக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு இல்லை. அபிஷேக் பச்சனுடன் ஒரு படத்தில் நடிக்க மட்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவருக்கு கிடைப்பது போன்று இருந்த ஒரு இந்தி படம் ஸ்ருதி ஹாஸனுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹாஸன் நடிக்கும் படத்தில் அசின் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அசின் ஏற்கனவே தசாவதாரம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தை பயன்படுத்தி அசின் மீண்டும் இந்த பக்கம் வந்துவிடுவாரோ?
Friday, August 23, 2013
Share Article
Subscribe to:
Post Comments (Atom)
asin down down
ReplyDelete