எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்லை, நான் ஒரு அரசியல்வாதி என்று விஜயகாந்த் தெரிவித்தார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.நாளை மறுநாள் (25–ந் தேதி) தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100 மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள உதவி பொருட்களை விஜயகாந்த் வழங்குகிறார்.
எம்.ஜி.ஆர்.காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் உதவி வழங்குகிறார். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:ஆந்திராவை பிரிப்பது போல் தமிழகத்திலும் மாநிலம் பிரிக்கப்படுமா?.ஆந்திராவிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.
இங்கு அதற்கான முடிவு வந்தபிறகு தமிழகம் பிரிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கலாம். தமிழகத்தில் விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகள் தேஜா அஸ்வினிக்கும், ஸ்ரீபரத்துக்கும் கடந்த புதன் கிழமை திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகளுடன் பாலகிருஷ்ணா குடும்பத்தினர் ஏழுமலையானை இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
0 comments:
Post a Comment