Latest News
Friday, August 9, 2013

திருடனுக்கு மனதுக்குள்ளேயே, நன்றி கூறிய அனுஷ்கா!

இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது, அனுஷ்காவுக்கு பல புதுமையான அனுபவங்கள் கிடைத்ததாம். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் தான் நடந்தன. அங்கு படப்பிடிப்பு நடந்தபோது, ஒருநாள், அனுஷ்காவின் “ஹேண்ட்பேக் திருடு போய் விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதில், லேப்-டாப், மேக்அப் சாதனங்கள், ஆப்பிள் போன் மற்றும் சில “ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் இருந்தனவாம். இதனால், அனுஷ்கா, சோகத்தில் ஆழ்ந்தாராம்.

இந்நிலையில், அருகேயிருந்த ஒரு மரத்தின் அடியில், அனுஷ்காவின் “ஹேண்ட்பேக் கிடைத்ததாம். வேகமாக ஓடிச் சென்று, அதை எடுத்து பார்த்துள்ளார், அனுஷ்கா. அதில், லேப்-டாப், மேக்அப் சாதனங்கள், போன் ஆகியவை அப்படியே இருந்தனவாம். ஆனால், அவர், கொறிப்பதற்காக வைத்திருந்த சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்களை காணவில்லை. அவற்றை மட்டும் எடுத்து சுவைத்து விட்டு, ஹேண்ட் பேக்கை. மரத்துக்கடியில் வீசி விட்டு சென்றுள்ளான், திருடன். இதனால், அந்த திருடனுக்கு மனதுக்குள்ளேயே, நன்றி கூறினாராம், அனுஷ்கா.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருடனுக்கு மனதுக்குள்ளேயே, நன்றி கூறிய அனுஷ்கா! Rating: 5 Reviewed By: gg