Latest News
Sunday, November 3, 2013

'ஆரம்பம்' வசூல் - ரஜினியை முந்தினார் அஜீத்!

 முதல் நாள் பட வசூலில் ரஜினியின் பட சாதனையை முறியடித்துவிட்டார் அஜீத்.

  'ஆரம்பம்' படம் நேற்று (அக்.31) உலகம் முழுவதும் ரிலீசானது. தமிழகத்தில் திரையிட்ட எல்லா தியேட்டர்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமான ரஜினியின் படத்துக்கு இருக்கும் கூடும் கூட்டம் அஜீத் படத்துக்கு கூடியதால் தமிழகத்தில் தாறுமாறான ஓபனிங்கை படம் கண்டுள்ளது. சென்னையில் சத்யம், உட்லாண்ட்ஸ், வடபழனியில் பங்கஜம், கமலா, காசி தியேட்டர்கள் அருகே சாலையில் டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு மெகா கூட்டம் கூடியது. அஜீத் படங்களிலே இந்த படம்தான் மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றிருப்பதாக தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நேற்றைய 5 ஷோக்களின் முடிவுக்கு பிறகு வந்த ரிசல்ட் அஜீத் ரசிகர்களுக்கும் 'ஆரம்பம்' பட யூனிட்டுக்கும் தீபாவளி போனசாக அமைந்தது. அதாவது, ரஜினியின் பட ஓபனிங்கையும் 'ஆரம்பம்' படம் முறியடித்துவிட்டது என்பதே அந்த செய்தி. இந்த தகவலை வினியோகஸ்தர்களும் உறுதி செய்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்களின் பாசிட்டிவ் டாக் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

  • Blogger Comments
  • Facebook Comments

1 comments:

Item Reviewed: 'ஆரம்பம்' வசூல் - ரஜினியை முந்தினார் அஜீத்! Rating: 5 Reviewed By: gg