Latest News
Sunday, November 3, 2013

எவனோ நண்பேன்டா தான் போட்டுக் கொடுத்துட்டான்: 'ரெய்டு' பற்றி நடிகர் புலம்பல்

சென்னை: எவனோ நமக்கு நன்கு பழக்கமானவன் தான் வருமான வரித்துறையிடம் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்று சர்ச்சையில் சிக்கிய 5 எழுத்து காமெடி நடிகர் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் படத்தில் பேசியதாகக் கூறி பிரச்சனையில் சிக்கிய அந்த காமெடி நடிகரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் நடிகரின் ஒரு நாள் சம்பளம், ஒரு படத்திற்கான சம்பளம் போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியலை கையோடு கொண்டு வந்திருந்தார்களாம்.

இதை பார்த்த நடிகருக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். எவனோ நம்முடன் இருப்பவன் தான் போட்டுக் கொடுத்திருக்கிறான் என்று புலம்பினாராம். மேலும் இனிமேல் வசனங்களில் உஷாராக இருக்க வேண்டும் என்பதில் நடிகர் உறுதியாக இருக்கிறாராம்.

நடிகருக்கு நேரமே சரியில்லை போன்று. ஏதாவது ஒரு வம்பில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: எவனோ நண்பேன்டா தான் போட்டுக் கொடுத்துட்டான்: 'ரெய்டு' பற்றி நடிகர் புலம்பல் Rating: 5 Reviewed By: gg