Latest News
Saturday, August 15, 2015

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம்

இனி தமிழக அரசு இயக்குநர் ராஜேஷுக்கு ஒரு சிலை செஞ்சு அதை மெரினாவுல வச்சு அதுக்கு பக்கத்துல 100 போலிசை காவலுக்கு வைக்கும்போல, அந்தளவுக்கு மதுகடை வாடிக்கையாளின் ஆதரவு ராஜேஷுக்கு பெருகிக் கொண்டே போகிறது...

எப்பவும் போல படத்தின் நாயகன் ஆர்யாவும், காமெடியன் சந்தானமும் சின்ன வயதிலிருந்து ஒண்ணா வளர்ந்து, ஒண்ணா படிச்சு, ஒண்ணா குடிச்சு என்று எல்லாமே ஒண்ணா இருக்கும் இவர்கள் எப்படி தனி தனியாக பிரிகிறார்கள் என்பதை அறுசுவை முழுங்க ஆறுவது சிக்கன் என்பதுபோல சொல்லியிருக்கிறார் மொக்க ராஜேஷ் சாரி வோட்கா ராஜேஷ்...

ராஜேஷுக்கு தண்ணி எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்கு கன்னிகளையும் பிடிக்கும்போல, தாமிரபரணி என்ற படத்தில் நடித்த பானுவை எங்கிருந்துதான் தேடிபிடித்தாரோ தெரியலங்க, அப்புறம் நம்ம பாகுபலி தமன்னா. இந்த இரண்டு நாயகிகளுக்கும் தண்ணீருக்கும் சூப்பர் பொருத்தம் என்பதால்தான் நாயகிகள் இரண்டு பேரையும் கரெக்டா செலக்ட் செய்திருக்கிறார். இருந்தாலும் என்ன செய்ய இந்த படத்துல தமன்னா மட்டும்தான் பீர் அடிக்கிறாங்க...

கல்யாணமே வேண்டாம் என்று இருக்கிறார் ஆர்யா, இவரின் நண்பனான சந்தானத்திற்கு பானுவுடன் திருமணம் ஆகிறது, அவ்வளவுதான் அதுக்கப்புறம் ஒண்ணும் நடக்காது இதற்கெல்லாம் காரணம் ஆர்யா... ஆர்யாவுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா நம்ம ரூட் கிளியர் என்று திட்டம் போடுகிறார் சந்தானம். ஆனால் ஆர்யாவுக்கோ நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு இருந்தா எனக்கு ஓகே என்று கூறுகிறார். ஆனால் தமன்னாவை பார்த்ததுமே வாயை பிளந்து கொண்டு அவர் பின்னாடி போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் சாமி...

இது நயன்தாரா மாதிரி இல்லையேடா என்று சந்தானம் கூறும்போது, யாரு மச்சா அது நயன்தாரா என்று ஆர்யா கூற திரையரங்கத்தில் விசில் பறக்கபோவது உறுதி... இப்படி படத்துல நிறைய இடத்துல பஞ்ச் வச்சு கதையை வம்படியாக இழுத்து இழுத்து, பாக்குற நமக்கு தலைவலிக்குது, பேசுற சந்தானத்துக்கு வாய் வலிக்குது...

காமெடின்னு சொல்லி தமன்னா அடிக்கிற மொக்க ஜோக்குகளுக்கு ஆர்யாவும் சந்தானமும் கடுப்பாகிறார்களோ இல்லையோ... புரிஞ்சா சரி....

தாமிரபரணி பானு முகத்துல பட்டி டிங்கரிங் எல்லாமே எவ்வளவு பார்த்தாலும் தூரத்திலிருந்து பார்க்கும்போது வரும் கிளுகிளுப்பு கிளோசப் காட்சிகளில் பறந்துவிடுகிறது.

க்ளைமேக்சில எப்பவும் ஒரு ஹிரோ வருவாரு இதுலயும் வர்றாரு. என்ன விஷாலையும் உட்கார வச்சு சரக்கும் கையுமா காட்றதுதான் கொடுமையிலும் கொடுமை... மதுவிலக்கு வேணும்னு சொல்ற புண்ணியவான்களே உங்களுக்கு ராஜேஷ் வீடு எங்க இருக்குன்னு தெரியாதா. தெரிஞ்சா போய் நலம் விசாரித்துவிட்டு வாங்கோ.

இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஒளிப்பதிவு நிரவ் ஷா படம் முழுக்க கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் விஷுவல் ட்ரீட்தான்...

இயக்குநர் ராஜேஷ். எப்படியும் இன்னும் 50 வருஷம் கழிச்சு குடிக்குற குடிகாரர்கள் எல்லாம் “நமக்காக ஒரு ராஜா இருந்தாண்டா, என்று மார்த்தட்டிக் கொள்ளுமளவுக்கு” போய்க் கொண்டிருக்கிறது ராஜேஷின் திரையுலக பணி...

மொத்தத்தில் வாசுவும் சரவணனும் கதையில் ஜீரோ... சரக்கில் ஹிரோ..

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க விமர்சனம் Rating: 5 Reviewed By: gg