"வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் சனிக்கிழமை வெளியிட்ட நடிகர் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறியது:
இது என்னுடைய 25-ஆவது படம். "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைப் போல இந்தப் படத்தையும் எனது ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளேன். படத்தில் சந்தானம், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.ராஜேஷ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை உணர்வு மேலாங்கி இருக்கும்.
நடிகர் சங்கத்தில் இளைஞர்கள், மூத்தோர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் குடும்பமாகவே இணைந்து நடித்து வருகிறோம். நடிகர் சங்கத்தை இதுவரை பெரியவர்கள் சிறப்பாக நடத்தினார்கள். தற்போது, இளைஞர்களான நாங்களும் சிறப்பாக நடத்துவோம் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட உள்ளோம். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை.
திரைப் படங்களை பார்த்துதான் இளைஞர்கள் மது அருந்துகிறார்கள், புகைப் பிடிக்கிறார்கள் என்று கூறுவது தவறு. அது அவரவர் பார்வையிலும், தனிப்பட்ட விருப்பத்திலும் உள்ளது. புகைப் பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட காட்சிகளைத் தவிர்த்துவிட்டுத்தான் படம் எடுக்க வேண்டும் என்பது கலைஞர்களின் படைப்பாற்றலை பாதிக்கும். சினிமாவுக்கும், நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை. சினிமாவிலிருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
திரைப்படங்கள் எடுப்பதில் எத்தனைபேரின் உழைப்பு அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து, திருட்டு டிவிடியில் படம் பார்க்கக் கூடாது என்ற எண்ணம் மக்களின் மனதில் எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் திருட்டு டிவிடி ஒழியும் என்றார் அவர்.
Monday, August 10, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment