Latest News
Tuesday, July 1, 2025

``ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவில்லை; காரணம்..'' - ரஷ்ய அதிபர் புதின் சொன்ன விளக்கம்

{"props":{"height":738,"medium":"image","url":"https://gumlet.vikatan.com/vikatan/2025-06-24/036115ox/putin","width":1200},"value":null,"media:title":{"props":{"type":"html"},"value":"புதின் விளக்கம்"},"media:description":{"props":{"type":"html"},"value":"புதின் விளக்கம்"}}

இஸ்ரேல் - ஈரான் மோதல் போக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்தது போல ஈரானுடன் ரஷ்யா ஆதராவாக இருந்தது.

ஈரான் அணு ஆயுதத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ரஷ்யாவும் களத்தில் இறங்கும் என அறிவித்தது. ஆனால், அதற்கு தேவையே இல்லாத அளவு ஈரானே பதிலடி கொடுத்தது. அதைத் தொடர்ந்து, ``அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டால் தக்க பதிலடி தரப்படும்." என காட்டமாக எச்சரித்திருந்தது. இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா ஏன் போரில் ஈடுபடவில்லை என்றக் கேள்வி எழுந்தது.

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

இதற்கு ரஷ்யாவில் நடந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பதிலளித்திருக்கிறார். அதில், ``ரஷ்யாவும் ஈரானும் பல ஆண்டுகளாக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஏராளமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் இஸ்ரேலில் வசிப்பதால், மோதலில் நடுநிலை வகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் இஸ்ரேலில் வசிக்கிறார்கள் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இஸ்ரேக் இன்று கிட்டத்தட்ட ரஷ்ய மொழி பேசும் நாடாகும். சந்தேகத்திற்கு இடமின்றி, ரஷ்யாவின் சமகால வரலாற்றில் இதை நாங்கள் எப்போதும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் இரண்டுடனும் ரஷ்யாவின் உறவுகள் நீண்ட காலமாக நட்பாக இருந்து வருகிறது. ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் முஸ்லிம்கள்தான். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) ரஷ்யாவும் ஒரு பார்வையாளராக இருக்கிறது." என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ``ஈரானுக்கு ஆதரவாக போரில் ஈடுபடவில்லை; காரணம்..'' - ரஷ்ய அதிபர் புதின் சொன்ன விளக்கம் Rating: 5 Reviewed By: gg