Latest News
Friday, May 8, 2026

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது பரஸ்பர வரியை அறிவித்தார்.

வரி அமலாகும் தேதியில் பல நீட்டிப்புகள் இருந்தாலும், ஆகஸ்ட் மாதம் பரஸ்பர வரி அமலுக்கு வந்தது.

பரஸ்பர வரியை 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து உலக நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து வரிகளும் ரத்தாக, ட்ரம்ப், வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி, உலக நாடுகள் மீது ஆறு மாதங்களுக்கு 10 சதவிகித வரியை விதித்திருந்தார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆனால், அதற்கும் தற்போது செக் வைத்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம்.

ட்ரம்பின் 10 சதவிகித வரி சட்டத்திற்குப் புறம்பானது என்று 2 - 1 வீதத்தில் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால், ட்ரம்பின் அரசாங்கம் நிச்சயம் இந்தத் தீர்ப்பையும் ஏற்காது.

உலக நாடுகள் மீது மீண்டும் வரி விதிக்க, என்ன வழி என்பதை இந்நேரத்திற்கு தேட தொடங்கியிருக்கும்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: `உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' - நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப் Rating: 5 Reviewed By: gg