Latest News
Tuesday, May 26, 2026

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்!

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, 'தற்காப்பு தாக்குதல்' என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரிய பின்னடைவு ஏற்படாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்காவிற்கு ஈரான் மீதுள்ள கண்ணுறுத்தல், 'ஈரானிடம் இருக்கும் யுரேனியமும், ஈரான் கட்டமைத்து வரும் அணுசக்தியும் தான்'.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

இந்தப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியும் 'செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒப்படைப்பு' தான்.

தற்போது ஈரான் தங்களிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் தர ஒப்புக்கொண்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரானில் இருந்து கொண்டுவரப்படும் யுரேனியம் என்ன செய்யப்படும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்...

"செறிவூட்டப்பட்ட யுரேனியம் (அணு உலைத் துகள்கள்!) உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, இங்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும்.

அல்லது, ஈரானுடன் இணைந்து மற்றும் ஒருங்கிணைந்து, அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) அல்லது அதற்கு இணையான ஒரு அமைப்பின் முன்னிலையில், அது இருக்கும் இடத்திலேயே அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறொரு இடத்தில் வைத்து அழிக்கப்படும்".

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்! Rating: 5 Reviewed By: gg