நகைச்சுவை நடிகையாக பல படங்களில் நடித்து வருபவர் வித்யூலேகா ராமன். இவர் கடந்த வாரம் முன்பாக வியன்னா சென்றபோது தனது பாஸ்போர்ட் உள்பட உடைமைகளை திருடனிம் பறிகொடுத்தார் என்ற செய்தி வெளிவந்தது. தற்போது தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இவர் கோடை விடுமுறைக்காக நண்பர்களுடன் வியன்னா சென்றுள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். அப்போது அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குள் உள்ளே நுழைந்த போது யாரோ இருவர் அவரிடம் வழி கேட்டுள்ளனர். நான் சுற்றுலா பயணி, எனக்கு தெரியாது என்று கூறியபோதும் சில நிமிடங்களில் மீண்டும் பின்தொடர்ந்து அதே கேள்வியை கேட்டுள்ளனர். திடீரென வித்யுலேகா பாஸ்போர்ட் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வைத்திருந்த பேக்கை பறித்து சென்றுள்ளனர்.இதனால் அதிர்ந்து போன அவர் அங்குள்ள போலிசிடமும், இந்திய தூதரகத்திடமும் புகார் தெரிவித்ததையடுத்து உடனடியாக பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கப்பட்டதாம். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னால் தான் செல்பி எடுப்பதற்காக மொபைல் போனை கையில் வைத்திருந்தாராம். அதனால் தான் போன் தப்பியது, மற்றவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது என்று கூறியுள்ளார்.இவர் தற்போது தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் அடுத்தடுத்த படங்களின் ரிலிசுக்காக காத்திருக்கிறார்.
0 comments:
Post a Comment