சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி கடந்த 24-ந்தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு பரனூரில் உள்ள மகேந்திரா சிட்டியில் இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சுவாதி, வழக்கம் போல பணிக்கு சென்ற போது தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டார். சுவாதி கொலையுண்டபோது ரெயில் நிலையத்தில் இருந்த சக பயணிகள் யாரும் அவரை காப்பாற்றவோ, கொலையாளியை பிடிக்கவோ முயற்சிக்காததும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்கொலை தொடர்பாக நுங்கம்பாக்கம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாத நிலையில், அருகில் உள்ள சவுராஷ்டிரா நகரில் வீடுகளில் பொறுத்தப்பட்டிருந்த கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் இருந்து வீடியோ காட்சிகளையும் பதிவு செய்தனர்.
கொலையாளியின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை உடனடியாக போலீசார் வெளியிட்டனர். ஆனால் கொலையாளி பற்றி எந்தவித துப்பும் துலங்கவில்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு சுவாதி கொலையில் குற்றவாளியை கைது செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இன்னும் 2 நாட்களில் கொலையாளிகளை பிடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் போலீசுக்கு கெடு விதித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கை ரெயில்வே போலீசிடமிருந்து அதிரடியாக மாற்றி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து எழும்பூர் ரெயில்வே போலீசிடமிருந்து வழக்கு விசாரணை நுங்கம்பாக்கம் போலீசுக்கு மாற்றப்பட்டது.
ரெயில்வே போலீசாருடன் இணைந்து சென்னை மாநகர போலீசாரும் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டே வந்தனர். வழக்கு விசாரணை மாற்றப்பட்டதை தொடர்ந்து, மாநகர போலீசார் முழுவீச்சில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதுபற்றி ஆலோசிப்பதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
நேற்று மாலையில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. அப்போது சுவாதி கொலை வழக்கில் தீவிரமாக துப்பு துலக்கி கொலையாளியை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சுவாதியை கொன்ற கொலையாளி யார்? என்பது பற்றி 5 நாட்களாகியும் எந்தவிதமான துப்பும் துலங்காமலேயே உள்ளது. கேமரா காட்சிகளும், கொலையாளி வீசிவிட்டுச் சென்ற அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகைகளும், போலீசுக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.
சுவாதியின் செல்போன் எண்ணை வைத்தும் துப்பு துலக்கப்பட்டது. அவர் யார்-யாருடன் பேசி இருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதன் மூலமாக 100-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை கண்டுபிடித்த போலீசார் சுவாதியிடம் போனில் பேசிய அனைவரிடமும் விசாரித்தனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை.
சுவாதியின் செல்போனில் முக்கியமான ஆதாரங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளி எடுத்துச் சென்ற செல்போன் இதுவரை கிடைக்கவில்லை.
இதையடுத்து சுவாதியின் பேஸ்புக் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் தொடர்ந்து சாட் செய்து பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் கேமராவில் பதிவாகி இருக்கும் வாலிபர் போன்ற தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்தான் சுவாதியை கொன்ற கொலையாளியாக இருக்கலாமோ என்கிற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போலீசுக்கு சுவாதி கொலை வழக்கு மாற்றப்பட்டதையடுத்து புதிய விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பெருமாள், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தேவராஜ் மற்றும் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் என்றும் கொலையாளியை நெருங்கிவிட்டோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment