நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந் தேதி சென்னையில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனை அவர் திருமணம் செய்து கொள்கிறார்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரனும், மு.க.முத்து–சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தை சேர்ந்த சி.கே.ரங்கநாதன்–தேன்மொழி ஆகியோரின் மகனுமான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்– சைலஜா ஆகியோரின் மகள் அக்ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கருணாநிதியின் குடும்பத்தில் விக்ரம் சம்பந்தம் செய்ய உள்ளார்.
மனு ரஞ்சித்–அக்ஷிதா ஆகிய இருவருக்கும் ஜூலை 10–ந் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொள்ள இருக்கிறார்கள்
0 comments:
Post a Comment