உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீஸ்கார்கள் இருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
மேம்பாலம் அருகே பணியில் இருந்த போது, லஞ்சப்பணத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும், பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அருகில் இருந்த சக காவலர்கள் அவர்களை தடுக்க முயன்றும், அதனைப் பொருட்படுத்தவில்லை. இந்த காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
0 comments:
Post a Comment