நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரஜினிகாந்த் உடல் பரிசோதனைக்காகவே வெளிநாடு சென்றிருப்பதாகவும், 'கபாலி' பட வெளியீட்டின் போது, சென்னை வருவார் என்றும் கூறினார். நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், பணிகள் தொடங்கும் போது அந்த நிதி வழங்கப்படும் என்றும் ரஜினிகாந்தின் சகோதரர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment