சிம்புவின் புதிய தோற்றத்தை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இப்படத்தில் சிம்புவின் புதிய தோற்றத்தை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் காணப்படும் இந்த புதிய தோற்றம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் சிம்புவின் மேக்கப் கலைஞராக ஹாலிவுட்டைச் சேர்ந்த சீன் பூட் பணியாற்றி வருகிறார். இப்படத்தில் சிம்பு முதன்முறையாக 3 வேடங்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.5 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிம்பு-யுவன் கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment